சிம்ரன், த்ரிஷா, ஈஸ்வரி ராவ்.. சூப்பர் ஸ்டாரின் சிறந்த ஜோடி யார்?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தின் நாயகி ஈஸ்வரி ராவ், ரஜினிக்கு சிறந்த ஜோடி யார் என கூறியுள்ளார்.

Who is the Best Pair for Super Star? Kaala Actress Eeswari Rao reveals secret

‘சுள்ளான்’, ‘சரவணா’ போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் நடிகை ஈஸ்வரி ராவ். சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-எண்ட்ரி கொடுத்தார்.

காலா படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்தது. இந்நிலையில், சிறந்த துணை நடிகருக்கான Behindwoods Gold Medals விருதினை ஈஸ்வரி ராவ் பெற்றார். அப்போது பேசிய அவர், தமிழ் சினிமாவில் தனது ரீ-எண்ட்ரி சூப்பர் ஸ்டாருடன் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

இந்த வாய்ப்பளித்த இயக்குநருக்கும், என்னை ஆதரித்த மக்களுக்கும் நன்றி என்றார். Behindwoods சார்பாக ஈஸ்வரி ராவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மீம் போட்டுக் காட்டப்பட்டது.

அதில், ரஜினிகாந்தின் ‘பேட்ட’ பட நாயகிகள் சிம்ரன் மற்றும் த்ரிஷாவுடன் இருக்கும் புகைப்படமும், காலா படத்தில் ஈஸ்வரி ராவுடன் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இந்த 3 ஜோடியில் சூப்பர் ஸ்டாரின் சிறந்த ஜோடி யார் என கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு நான் எப்படி பதில் கூற முடியும், ஆடியன்ஸ் தான் கூற வேண்டும். மீமில் தனது புகைப்படம் இடம்பெற்றது பெருமையாக இருப்பதாகவும் ஈஸ்வரி ராவ் கூறினார்.

சிம்ரன், த்ரிஷா, ஈஸ்வரி ராவ்.. சூப்பர் ஸ்டாரின் சிறந்த ஜோடி யார்? VIDEO