எவர்க்ரீன் நாயகி..‘வாலி’ படத்தின் ரொமாண்டிக் சீனை மீண்டும் நடித்து அசத்திய சிம்ரன்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் நடிகையான சிம்ரன், தான் நடித்த ‘வாலி’ படத்தில் இடம்பெற்ற காதல் காட்சியை மீண்டும் நடித்துக் காட்டி அசத்தியுள்ளார்.

Evergreen Actress Simran recreates the iconic love scene from Vaali

தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன், சிறிய இடைவெளிக்குப் பின் தற்போது தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.இப்படத்தில் சிம்ரனின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.

சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸுக்கு பிரத்யேக பேட்டியளித்த சிம்ரன், தான் நடித்த ‘வாலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற மிகவும் பிரபலமான காதல் காட்சியை நடித்துக் காட்டினார்.

‘வாலி’ படத்தில் வரும் ‘சோனா ஓ சோனா..’ பாடலின் இடையே சிம்ரனும், அஜித்தும் பேசிக்கொள்ளும் காதல் வசனத்தை ரசிக்காத காதலர்களே இருக்க முடியாது. அந்த காட்சியை மீண்டும் சிம்ரன் நடித்துக் காட்டியிருக்கிறார்.

எவர்க்ரீன் நாயகி..‘வாலி’ படத்தின் ரொமாண்டிக் சீனை மீண்டும் நடித்து அசத்திய சிம்ரன் VIDEO