''ரஜினி-கமல் சேவை கோடம்பாக்கத்துக்குத் தேவை''... பிரபல தயாரிப்பாளர்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
J Sathish Kumar says Rajini and Kamal should talk about TFPC strike tamil cinema news

'திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்' என, நடிகர்கள் ரஜினி-கமலுக்கு தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-

 

''ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்துவிட்டனர். ஆனால் அவர்களை ஏற்றிவிட்ட ஏணி இன்று சீக்கு வந்த யானையாக சின்னாபின்னமாகிக் கொண்டு இருக்கிறது. உங்களை வளர்த்துவிட்ட இந்தத் திரையுலகத்திற்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கிறீர்கள்?

 

திரையுலகத்தில் இவ்வளவு பிரச்சனைகள் உள்ள இந்த சூழ்நிலையில் ரஜினி, கமல் இருவருமே இதுபற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ஒவ்வொரு ஆற்றையும் பார்த்துவிட்டு வந்து இது மாசுபட்டு கிடக்குது, இதை சுத்தப்படுத்தனும்னு கமல் சொல்றாரு. நீங்க வளர்ந்த இந்த இடத்துல இவ்வளவு பெரிய குப்பை மொத்தமா முடங்கிப்போய் கிடக்குது. இதை யாரு சுத்தப்படுத்துவது?

 

ரஜினி, கமல் ரெண்டு பேருமே நாட்டுக்கு நல்லது செய்யுங்கள், வேண்டாமென சொல்லவில்லை.முதலில் நீங்கள் வளர்ந்த இடத்திற்கு செய்ய வேண்டியது உங்கள் கடமை அல்லவா? நீங்கள் இருவரும் குரல் கொடுத்தால் அடுத்த 5 நிமிடத்தில் முடிந்துவிடுகிற பிரச்சனை இது.

 

தேவைப்பட்டால் 'க்யூப்' போல புதிதாக ஒன்றைக் கூட நாம் ஆரம்பிக்க முடியும்.இதற்கான முயற்சியை நீங்கள் எடுங்கள். உங்கள் பின்னாடி நாங்கள் வரத் தயாராக இருக்கிறோம். இப்போதைய உங்கள் சேவை முதலில்  கோடம்பாக்கத்துக்குத் தான் தேவை''.

'அவர் அப்படித்தான்' ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்த கமல்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Kamal Haasan's criticized about Rajini's silence tamil cinema news

கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் கமல்ஹாசன் சென்னை புறப்படுவதற்கு முன், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் பேசுகையில், "குரங்கணி நிகழ்வை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இறந்தவர்கள் பலரும் இளைஞர்கள் என்பதால் எதிர்காலத்தின் ஒரு பகுதி தீக்கிரையாகி விட்டது,'' என்றார்.

 

அப்போது நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை உள்ளிட்ட பல விஷயங்களில் பதில் சொல்லாமல் நழுவுகிறாரே என, செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு கமல், ''இதுமட்டும் இல்லாமல் அவர் பல விஷயங்களில் அப்படித்தான் இருக்கிறார்,'' என்று பதிலளித்தார்.

J Sathish Kumar says Rajini and Kamal should talk about TFPC strike tamil cinema news

People looking for online information on J.Sathish Kumar, Kamal Haasan, Rajini, Rajinikanth will find this news story useful.