'காந்தியின் உருவபொம்மையை சுட்டது இதுக்குத்தான்'...இதெல்லாம் ஒரு காரணமா?...கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Feb 01, 2019 09:18 PM

தேச தந்தையாக கொண்டாடப்படும் காந்தி தனது 78வது வயதில்,கடந்த 1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள்,நாதுராம் கோட்சேவினால் சுட்டு கொல்லப்பட்டார்.இதையொட்டி ஆண்டு தோறும் ஜனவரி 30 அன்று காந்தியடிகளின் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காந்தியின் 71 வது நினைவு தினம் கடந்த 30ம் தேதி அனுசரிக்கப்பட்டது.

We’ve trained our kids to kill says Hindu Mahasabha leader

அன்றைய தினத்தில் உத்திரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள இந்து மகாசபா என்ற அமைப்பின் தேசிய செயலாளர்,சக்குன் பாண்டே, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுடுவது போன்ற வீடியோ வெளியாகி கடும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.அந்த வீடியோவில்,காந்தியின் உருவ பொம்மையை சக்குன் சுட்டுவிட்டு,தனது ஆதரவாளர்களுடன் அவரது கொடும்பாவியை தீயிட்டு கொளுத்துவது போன்று பதிவாகியிருந்தது.இது நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பல தலைவர்களும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக சக்குன் மற்றும் அவரது கணவர் அசோக் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் காந்தியின் உருவபொம்மையை எரித்ததிற்கும்,சுட்டதிற்கும் விளக்கம் அளித்துள்ள சக்குன் பாண்டேவின் கணவர் 'தசரா விழாவின் போது ராணவனின் உருவ பொம்மையை எரிப்பது வழக்கம். அதே போன்று காந்தி சுடப்பட்ட தினத்தில் நாங்கள் அவரது உருவப்பொம்மையை சுடுகிறோம்.

இதை நாங்கள் ஆண்டுதோறும் செய்வது வழக்கம் தான்.மேலும் தேசத்தின் ஒற்றுமையை சிதைப்பவர்கள் யாராக இருந்தாலும் கொலை செய்ய வேண்டும் என்று எங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்துள்ளோம். எங்கள் குழந்தைகள் அப்பாவிகளாக இருக்கமாட்டார். அவர்களை கொல்லப்படுவதற்கு முன்பு, பலரை கொன்றுவிடுவார்கள்” என தெரிவித்தார்.

இந்நிலையில் சக்குன் பாண்டேவின் கணவர் தெரிவித்துள்ள விளக்கம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தேச தந்தையை அவமதித்துவிட்டு அதற்கு விளக்கமும் கொடுப்பார்களா என நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகிறார்கள்.

Tags : #GANDHI #HINDU MAHASABHA #71ST DEATH ANNIVERSARY