கமலின் 'இந்தியன் 2' படத்துக்கு இசையமைப்பாளர் இவர்தான்.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By |
Venkat Prabhu says that Anirudh will compose music for Kamal Haasans n

வெங்கட் பிரபு தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஆர்.கே நகர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இசையமைப்பாளர் அனிருத் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டார்.

 

விழாவில் இயக்குநர் வெங்கட்பிரபு பேசுகையில்,''அனிருத் மிகவும் எளிமையான மனிதர். 'ஆர்கேநகர்' இசை வெளியீட்டு விழா பற்றிக் கூறியதும் உடனே வருவதாக ஒப்புக்கொண்டார்.அவரது பிசியான வேலைகளுக்கு இடையிலும் இசை வெளியீட்டிற்கு வந்த அனிருத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

 

நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. விரைவில் அது நடைபெறும் என நான் நம்புகிறேன். ஒரே நேரத்தில் தலைவர் படம், கமல் படம்(இந்தியன் 2) என அனிருத்தின் வளர்ச்சியைப் பார்க்கும்போது நன்றாக உள்ளது.படத்தின் பைனல் காப்பியைப் பார்க்காமலேயே படத்தை வெளியிட ஒப்புக்கொண்ட டிஎஸ்எல் முரளிக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்,''என்றார். 

Tags : #KAMALHAASAN

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Venkat Prabhu says that Anirudh will compose music for Kamal Haasans n | தமிழ் News.