ஜப்பானை புரட்டிப்போடும் ட்ராமி புயல்: 10 பேர் பலி, 600 பேர் தஞ்சம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 30, 2018 01:46 PM
Trami batters Okinawa: Nine injured, over 600 people shifted Japan

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தாலும் சுனாமியினாலும் மக்கள் உயிரையும் உடமையும் இழந்து சர்வதேச நாடுகளின் வருத்தத்துக்கு ஆளாகியுள்ளது.இதேபோல் பேரிடர் காலம் என்பதால் ஜப்பானிலும் சூறைக்காற்று அதி தீவிரமாகியுள்ளது.

 

ட்ராமி என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த அதி தீவிர புயல் காற்று ஒகினாவா தீவு உள்ளிட்ட பகுதிகளை உண்டு இல்லை என்று செய்துகொண்டிருக்கிறது.  மரங்களை செடி போல் வேரோடு பிடுங்கி எறியும் இந்த  புயலால் மக்கள் கடும் பயத்தில் உள்ளனர். இதுவரையில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 600-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் பெயர்ந்து வருகின்றனர்.

Tags : #TYPHOONTRAMI #OKINAWA #JAPAN