குறைமாத கருவை விமான கழிவறையில் போட்டுச்சென்ற இந்திய விளையாட்டு வீராங்கனை

Home > News Shots > தமிழ்

By |
Taekwondo player leaves immature foetus on flight toilet

மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து கவுஹாத்தி வழியாக டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில் உள்ள கழிவறையில் குறைமாத கரு கிடந்ததை கணடு விமான ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் அந்த விமானத்தில் பயணம் செய்த இளம் 'டேக்வாண்டோ' சண்டை விளையாட்டு வீராங்கனை ஒருவர் தான் அந்தக் கருவை வீசிச் சென்றிருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.


கழிவறையில் கிடந்தது ஆறுமாத கருவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்தப் பெண் போட்டிகளில் பங்கேற்பதற்காக நாளை தென்கொரியா செல்லவிருந்ததாகவும் அவருடன் அவரது பயிற்சியாளரும் பயணிப்பதாகவும் இருந்தது. அந்தப் பெண் கர்ப்பமாக இருந்ததை தன்னிடம் தெரிவிக்கவில்லை என அவரது பயிற்சியாளர் கூறியிருக்கிறார்.


கருவை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ள போலீசார் அந்த விளையாட்டு வீராங்கனையை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். ஏர் ஏசியா நிறுவனம் கூறுகையில், விமானம் தரையிறங்குவதற்கு தயாராகையில் அந்த கரு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதாகவும், அதுகுறித்து அனைத்துப் பெண் பயணிகளிடமும் விசாரித்ததில் அந்த கருவை கழிவறையில் எறிந்தவர் அந்த 'டெக்வாண்டோ' வீராங்கனை என்பது தெரியவந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

Tags : #AIRASIA #TAEKWONDO #LAVATORY #IMMATUREFOETUS