'வாழ்க்கையின் முக்கிய கட்டத்துக்குள் காதலியுடன் நுழைகிறேன்'.. ராஜமௌலி மகன் நெகிழ்ச்சி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 06, 2018 11:55 AM
SS Rajamouli\'s son gets engaged

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என போற்றப்படும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் கார்த்திகேயாவுக்கும்,நடிகர் ஜெகபதி பாபுவின் உறவினர் பூஜா பிரசாத்திற்கும் நிச்சயதார்த்தம் நிகழ்ந்துள்ளது.

 

இதுகுறித்து கார்த்திகேயா தனது டிவிட்டர் பக்கத்தில், ''வாழ்வின் முக்கிய கட்டத்திற்குள் என் காதல் துணையுடன் நுழைவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவரின் அன்புக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

கார்த்திகேயன் தற்போது துணை இயக்குநராக தனது தந்தை ராஜமௌலியின் படங்களில் பணியாற்றி வருகிறார்.பிரபலங்கள் பலரும் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துயுள்ளனர்.

 

விரைவில் கார்த்திகேயா-பூஜா திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : #SSRAJAMOULI #BAAHUBALI