'பணம் இருந்தா போதும்'...இதெல்லாம் கூட விண்வெளிக்கு அனுப்பலாம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 05, 2018 10:00 AM
SpaceX Falcon 9 rocket Taking The Cremated Remains People Into space

தனியார் நிறுவனம் ஒன்று விண்வெளிக்கு இறந்த நபர்களின் சாம்பலை அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

 

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த தனியார் நிறுவனம் எலூசியம் ஸ்பேஸ்.இந்த நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் வகை,ராக்கெட் மூலம் இறந்தவர்களின் அஸ்தியினை விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

 

இதனை தொடர்ந்து ஏராளமான நபர்கள் தங்கள்  நெருங்கிய உறவினர்களின் அஸ்தியினை விண்வெளிக்கு அனுப்ப முன்பதிவு செய்துள்ளார்கள்.நபர் ஒன்றிற்கு 2,500 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதாவது 1,76,187 இந்திய ரூபாய் மதிப்பு செலவில் விண்வெளிக்கு அனுப்ப முன்பதிவு செய்துள்ளனர்.

 

இன்னும் சில நாட்களில் விண்வெளிக்கு அனுப்ப உள்ள அந்த ராக்கெட்டில்,முதல் முறையாக ராணுவ வீரர்கள்,சமூக ஆர்வலர்கள்,அறிவியல் அறிஞர்கள் மற்றும் வானவியல் ஆர்வலர்கள் என முக்கிய பிரமுகர்களின் சாம்பல்களை கொண்டு செல்லபட உள்ளது.

 

இறந்தவர்களின் சாம்பல்களை மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தற்போது செலுத்தப்படும் இந்த ராக்கெட்டில் 100 நபர்களின் சாம்பல்களை மட்டுமே அனுப்ப அனுமதிக்கப்படும் என எலூசியம் ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்தது.மேலும் இந்த ராக்கெட்டுகளை போனில் உள்ள செயலியை வைத்து கண்காணிக்க முடியும் எனவும் இந்த ராக்கெட் சாம்பலை விண்ணில் செலுத்திவிட்டு பூமியை நான்கு ஆண்டுகள் சுற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #ELYSIUM SPACE #STAR II MISSION #SPACEX FALCON 9 ROCKET