தந்தைக்காக புத்தம் புதிய 'பிஎம்டபிள்யூ' காரை... 'சவப்பெட்டியாக' மாற்றிய மகன்!

Home > News Shots > தமிழ்

By |
Nigerian man buries father in brand-new BMW

நைஜீரியாவை நாட்டின் அனம்பரா மாகாணத்தைச் சேர்ந்த அலுபைக் என்பவர் இறந்த தனது தந்தையின் உடலை ரூபாய் 45 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரில் வைத்து அடக்கம் செய்துள்ளார். இதற்காக இவர் புத்தம்புதிய பிஎம்டபிள்யூ காரை விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

 

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரில் வைத்து தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்பது தனது தந்தையின் ஆசை என்றும்,அதற்காக தான் இந்த காரை வாங்கியதாகவும் அலுபைக் தெரிவித்துள்ளார்.

 

புத்தம் புதிய பிஎம்டபிள்யூ காரை சவப்பெட்டியாக பயன்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Tags : #BMWCAR #NIGERIA

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nigerian man buries father in brand-new BMW | தமிழ் News.