'உலகையே கலங்க வைத்த ஒரு தாயின் கதறல் புகைப்படம்'...காரணம் என்ன?

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 28, 2018 10:20 AM
Mother and her children fleeing tear gas in US Border photo goes viral

அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையின்,கண்ணீர் புகை குண்டுகளால் விரட்டியடிக்கப்படும் ஒரு தாயின் கதறல் புகைப்படம் உலக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் புலம்பெயர்ந்து வரும் மக்களை துரதியடிக்கும் வேலையை அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை செய்துவருகிறது.இந்நிலையில் வடக்கிலிருந்து ஒரு வாரம் பயணித்து மெக்ஸிகோ எல்லைப்பகுதியான டிஜுனாவிற்கு  மரியா மெஸா என்ற பெண் தனது 5 குழந்தைகளுடன் வந்தார்.அவருடன் சுமார் 100கும் மேற்பட்ட குடும்பங்கள் அமெரிக்க எல்லையினை நோக்கி வந்தார்கள்.

 

இந்நிலையில் அமெரிக்க எல்லையில் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டிருக்கும்,பாதுகாப்பு படையினர்,எல்லையின் அருகே வருபவர்களை கண்ணீர் புகை வீசி விரட்டியடிக்கும் செயலை செய்து வருகிறார்கள்.குழந்தைகளும், பெற்றோர்களும் சற்றும் எதிர்பாராத தருணத்தில், இதுபோன்ற செயல்களில் எல்லை பாதுகாப்புப்படை ஈடுபட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவம் குறித்து பேசிய மரியா மெஸா ''நானும் என் குழந்தைகளும் மேலும் பல்வேறு வயதினரும் அங்கு கூடியுருந்தோம். அப்போது எங்களை நோக்கி 3 கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.இதை சற்றும் எதிர்பாராத நான்,எனது குழந்தைகளை கூட்டிக்கொண்டு ஓடினேன். நான் இறந்து விடுவேனோ என்ற பயம் எனக்குள் இருந்தது. இது முற்றிலும் கண்டனத்துக்குரிய செயல். நாங்களும் மனிதர்கள் தான்'' என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த புலம் பெயர்ந்த அமெரிக்கர்கள் ''5200 பேர் எல்லையில் பரிதாபமான நிலையில் இருப்பதை ட்ரம்ப் அரசு கண்டுகொள்ளவில்லை.ட்ரம்ப் அரசு அடிக்கடி எல்லையை மூடிவிடுகிறது. நிரந்தரமாக மூடுவதாகவும் கூறிவருகிறது. அப்படியென்றால், நாங்கள் வேறு நாட்டுக்கு அகதியாக செல்ல வேண்டியது தான்" என் பரிதாபத்துடன் தெரிவித்தார்கள்.

Tags : #MIGRANT MOTHER #MARIA MEZA #US BORDER