'வாணி ராணி' இன்றுடன் முடிவுக்கு வருகிறது.. ராதிகா சரத்குமார் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Dec 07, 2018 07:09 PM
Mixed feelings as our serial Vaani Raani comes to an end, says Rathika

வாணி ராணி சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு இன்று என, நடிகை ராதிகா சரத்குமார் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

 

சன் டிவியில் கடந்த சில வருடங்களாக வாணி ராணி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை ராதிகா சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று இந்த சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு என ராதிகா தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'வாணி ராணி' சீரியல் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கலவையான எண்ணோட்டங்கள் எழுகின்றன. இன்றுதான் கடைசி நாள் ஷூட். நீண்ட பயணம்.நிறைய அனுபவம். சில மகிழ்ச்சியான தருணங்கள். சில வருத்தமான அழுத்தமான சோர்வான தருணங்கள். ஆனால், ராடானுக்காக களைப்பின்றி உழைத்த அனைவருக்கும் நன்றி. நம்பிக்கையும் ஊக்கமும் அளித்த சன் டிவிக்கு நன்றி,'' என தெரிவித்துள்ளார்.

 

வாணி ராணி சீரியலைத் தொடர்ந்து ராதிகா சரத்குமார் 7 வேடங்களில் நடிக்கும் சந்திரகுமாரி சீரியல், அதே நேரத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #RADHIKASARTHKUMAR