'குடும்பத்தினருடன் இருக்க முடியவில்லை'.. பிரபல நடிகை உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 14, 2018 07:19 PM
Missing celebrations back in home: Sonali Bendre

பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே தற்போது அமெரிக்காவில் புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வருகிறார். நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் அவரது கணவர் கோல்டி பெல், மகன் ரன்வீர் சிங் இருவரும் அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பியுள்ளனர்.

 

இந்தநிலையில் தனது மகன் ரன்வீர் பூஜை செய்வது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு,''எனது இதயத்துக்கு கணேஷ் சதுர்த்தி மிகவும் நெருக்கமான பண்டிகை. வீட்டில் அது தொடர்பான கொண்டாட்டங்களை மிஸ் செய்கிறேன்.எனினும் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவே உணர்கிறேன். அன்பு, சந்தோஷம், ஆசீர்வாதம் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளுங்கள்,''என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

 

இவரின் இந்த பதிவைக்கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளையும், சீக்கிரம் குணமுடைய தங்களுடைய ஆசீர்வாதங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Tags : #BOLLYWOOD #SONALIBENDRE