புற்றுநோய் இருப்பதை மகனிடம் சொன்ன தருணம்'.. சோனாலி பிந்த்ரே உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By |
Sonali Bendre pens heartwarming note for son

தமிழில் தான் நடித்த காதலர் தினம் படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சோனாலி பிந்த்ரே தற்போது புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார்.

 

இந்தநிலையில் தனது புற்றுநோய் குறித்து மகனிடம் சொன்ன அந்த தருணம் எப்படி இருந்தது என்பதை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில். "சரியாக 12  வருடம் 8 மாதம் 11 நாட்களுக்கு முன் பிறந்த எனது மகன் எனது மனதை ஆண்டு வருகிறான். எனக்கு கேன்சர் இருப்பதை எனது மகனிடம் சொல்ல வேண்டும் என முடிவு செய்தேன். அவன் அதை முதிர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான்.

 

இதுபோன்ற சமயங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது முக்கியமானது. அவர்கள் நாம் நினைப்பதை விட முதிர்ச்சியாக இதுபோன்ற விஷயங்களை கையாளுகின்றனர். எனது மகன் ரன்வீருடன் நேரத்தை செலவிடுவது நேர்மறையாக இருக்க உதவுகிறது. இன்று ஒருவருக்கொருவர் மாற்றி,மாற்றி வலிமையை பெற்றுக்கொள்கிறோம்,'' என தெரிவித்துள்ளார்.

 

சோனாலி பிந்த்ரேவின் இந்த உருக்கமான பதிவைப் படித்த ரசிகர்கள் பலரும், அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags : #SONALIBENDRE

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sonali Bendre pens heartwarming note for son | தமிழ் News.