கடன் வாங்கி லாட்டரி வாங்கியவருக்கு அடித்தது ஜாக்பாட்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 13, 2018 01:56 PM
Labourer borrows Rs 200 to buy lottery ticket, wins Rs 1.5 crore

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ் குமார்.இவரும் இவரது மனைவியும் செங்கற்சூளையில் தினக்கூலியாக வேலைபார்த்து வருகிறார்கள்.இருவரும் தினக்கூலியாக ரூ.250 சம்பாதித்து வந்தனர்.இவர்கள் வாங்கும் சம்பளம் இவர்களின் 4 குழந்தைகளின் படிப்பு செலவு மற்றும் தினசரி குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை.இதனால் அவர்களின் குடும்பத்தை நடத்துவதற்கே மிகவும் சிரமப்பட்டனர்.

 

இந்நிலையில் திடீரென அவர்களுக்கு  அடித்த ஜாக்பாட் அவர்களின்  வாழ்க்கையையே மாற்றிவிட்டது.பக்கத்து வீட்டுக்காரர்களிடம் 200 ரூபாய் கடன் வாங்கி மனோஜ் குமார் வாங்கிய லாட்டரிகிற்கு 1.5 கோடி ரூபாய் விழுந்திருக்கிறது.இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயிருக்கிறார்.பரிசு விழுந்ததையடுத்து ஊரில் அவரின் மதிப்பு வேற லெவலுக்கு சென்றிருக்கிறது.

 

பஞ்சாப் மாநில ராக்கி பம்பர் மூலம் அவருக்கு 1.5 கோடி ரூபாய் விழுந்திருக்கிறது.ரியல் எஸ்டேட் அதிபர்கள்,வங்கி அதிகாரிகள் என பல பேர் அவரின் வீட்டின் கதவை தட்டியபடி இருக்கிறார்கள்.இப்போது  பரிசு பணத்தை வைத்து என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருக்கிறார் மனோஜ்.

 

லாட்டரி பரிசு விழும் முன் இவர்களது மூத்த மகள் 12ம் வகுப்பு முடித்து விட்டு மேற்படிப்பு படிக்க வசதியில்லாமல் சங்கூரில் வேலைக்குச் செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தார். இப்போது வேலையெல்லாம் வேண்டாம் மேல்படிப்பிற்கான கல்லூரிகளை தேடு  என்று மனோஜ் தன் மகளுக்கு ஊக்கமளித்தார். இவருக்கு போலீஸ் துறையில் சேர வேண்டும் என்ற ஆசை இருந்ததால் அதை நோக்கி படிப்பில் கவனம் செலுத்துமாறு குரோர்பதி மனோஜ் மகளுக்கு அறிவுறுத்தினார்.

 

மனோஜின் தந்தை சமீபத்தில் ஆஸ்துமா நோயினால் மரணமடைந்தார்.தந்தையின் சிகிச்சைக்காக தினக்கூலியாக கிடைத்த பணத்தில் சேர்த்த பணம் முழுவதையும் சிகிக்சைக்காக செலவழித்தார்.ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை ஆனால் இப்போது கோடிக்கணக்கில் பணம் வந்துள்ளது, தன் தந்தை இருந்திருந்தால் அவருக்கு இன்னும் தரமான சிகிக்சை அளித்து அவரை காப்பாற்றி இருக்கலாம் என கண்ணீர் மல்க கூறினார் மனோஜ்.

Tags : #LOTTERY TICKET #LABOURER #PUNJAB