ரசிகர்கள்+விமர்சகர்களின் 'பேவரைட்' படத்தைக் கைப்பற்றிய ஜீ டிவி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 31, 2018 07:05 PM
Kathir\'s Pariyerum Perumal satellite rights sold to Zee TV

இந்த ஆண்டு வெளியாகி விமர்சகர்கள்+ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களில் பரியேறும் பெருமாளுக்கு முக்கிய இடமுண்டு.

 

சமுதாயத்தில் ஆழமாகப் புரையோடிப் போயிருக்கும் சாதி அடையாளங்களையும், அது எவ்வாறு மனிதனின் வாழ்வை சிதைக்கிறது என்பதனையும் மிகவும் அழுத்தமாக இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு செய்திருந்தார்.

 

கடந்த செப்டம்பர் 28-ம் தேதி கதிர்,கயல் ஆனந்தி,யோகிபாபு நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இந்தநிலையில் 'பரியேறும் பெருமாள்' சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை ஜீ தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

Tags : #PARIYERUMPERUMAL #ZEETV