'இது அன்பால சேர்ந்த கூட்டம் அழிக்க முடியாது'.. சிஎஸ்கே பிரபல வீரர்!
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 10, 2018 07:26 PM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டியை நடத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சிகளும் இன்று காலையில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை அண்ணா சாலை, சேப்பாக்கம் மைதானம் உட்பட பல்வேறு இடங்களிலும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹீர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இது அன்பால சேர்ந்த கூட்டம் அழிக்க முடியாது' என தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர், "சென்னை சூப்பர் கிங்ஸின் சொந்த மண்ணில் ஐபிஎல் போட்டியில் இன்றுஇரவு விளையாட நான் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன். இந்த போட்டியைக் காண சென்னை மக்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள், எங்களுக்கு உற்சாகத்துடன் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இது அன்பால சேர்ந்த கூட்டம் அழிக்க முடியாது. எடுடா வண்டிய, போடுடா விசில,'' என பதிவிட்டிருக்கிறார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
