விருதுக்கான பரிசுத்தொகையை மாற்றுத்திறனாளிக்கு அளித்த ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By |
Shahrukh Khan donates man of the match to physically challenged youth

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

இந்த போட்டியில் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் அரைசதம் அடித்த சுனில் நரேனுக்கு ஆட்ட நாயகன் விருது வழக்கப்பட்டது. மேலும் சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக்கிற்கு ஸ்டார் பிளஸ் நயி சொச் விருதும் 1 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.  

 

தினேஷ் கார்த்திக் வாங்கிய விருதுக்கான மொத்த பரிசுத்தொகையும் ஒரு மாற்றுத் திறனாளி இளைஞனுக்கு கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் வழங்கினார்.

 

ஷாருக்கான் மற்றும் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் இணைந்து,  விருதையும் பரிசுத்தொகையையும் அந்த இளைஞனுக்கு கொடுக்க, அந்த இளைஞன் மகிழ்ச்சியில் திளைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shahrukh Khan donates man of the match to physically challenged youth | தமிழ் News.