'ஹைதராபாத்துக்கு' எதிராக இன்னொரு வெற்றியைப் 'பார்சல்' செய்யுமா தோனி படை?

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: Sunrisers Hyderabad won the toss and choose to field

ஹைதராபாத் ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் இன்று மாலை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

 

இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

 

கடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணி தோல்வியைத் தழுவியதால், மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்ப முனைப்பு காட்டும்.இதேபோல ராஜஸ்தான் அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால் வெற்றியைத் தக்க வைக்க சென்னை அணியும் போராடும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

முதல் 3 போட்டிகளிலும் சென்னை கேப்டன் தோனி டாஸ் வென்று, பவுலிங்கைத் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆடும் இரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:-

 

சென்னை சூப்பர் கிங்ஸ்:தோனி(கேப்டன்), ஷேன் வாட்சன், அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, சாம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாகர், கரண் சர்மா, ஷர்துல் தாகூர், டூ பிளசிஸ்.

 

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி: ஆர்.புவி, சகா, கேன் வில்லியம்சன், யூசுப் பதான், மணீஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன், தீபக் ஹூட, ஸ்டான்லகே, புவனேஷ் குமார், ரஷீத் கான், சித்தார்த் கவுல்.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: Sunrisers Hyderabad won the toss and choose to field | தமிழ் News.