'பாகுபலி' அம்பாதி ராயுடுவைப் பாராட்டி 'பாடல்' வெளியிட்ட பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: Mark Wood Tribute to Ambati Rayudu

கடந்த ஞாயிறன்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் அம்பாதி ராயுடு சதமடித்தார். இந்த சாதனைக்காக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

 

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் தனது நண்பர்களுடன் இணைந்து, அம்பாதி ராயுடுவிற்காக பாடலொன்றைப் பாடி வெளியிட்டுள்ளார்.

 

ஒவ்வொரு வரியின் முடிவிலும் ராயுடு என முடியும் இப்பாடலை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது. ரசிகர்களும் மார்க் வுட்டின் இந்த முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.

 

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த மார்க் வுட்டை டெஸ்ட் தொடர் காரணமாக, சென்னை அணி முன்னதாகவே விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

 

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: Mark Wood Tribute to Ambati Rayudu | தமிழ் News.