பெங்களூர் பவுலர்களை 'வெளுத்தெடுத்த' தோனி-ராயுடு... சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

Home > News Shots > தமிழ்

By |
IPL2018: Chennai Super Kings beat Royal Challengers Bangalore by 5 Wic

புகைப்பட உதவி @IPL

 

சின்னச்சாமி மைதானத்தில் சற்றுமுன் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைக் குவித்தது.

 

அதிகபட்சமாக பெங்களூர் அணியின் ஏபி டிவிலியர்ஸ் 68 ரன்களும், குவிண்டன் டி காக் 53 ரன்களும் குவித்தனர். சென்னை  அணியின் பந்து வீச்சாளர்கள்  இம்ரான் தாஹீர், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

இதைத்தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

சென்னை அணியில் அதிகபட்சமாக கேப்டன் தோனி 70 ரன்களும், அம்பாதி ராயுடு 82 ரன்களும் குவித்தனர். இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2018: Chennai Super Kings beat Royal Challengers Bangalore by 5 Wic | தமிழ் News.