போராட்டம் எதிரொலி: சென்னையில் நடைபெறவிருந்த 'ஐபிஎல் போட்டிகள்' வேறு இடத்துக்கு மாற்றம்?
Home > News Shots > தமிழ்By Manjula | Apr 11, 2018 04:02 PM

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை-கொல்கத்தா அணிகள் நேற்று முதன்முறையாக மோதின. ஆனால் காவிரி,ஸ்டெர்லைட் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றன.
மேலும் சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான அண்ணா சாலை அருகே நேற்று தொடர் போராட்டம் நடைபெற்றதால், கிரிக்கெட் வீரர்கள் மைதானத்துக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதுதவிர போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மைதானத்துக்குள் காலணிகள் வீசி எறியப்பட்டன. இதனால் ஆட்டம் சுமார் 2 நிமிடங்கள் தடைபட்டது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டால் இந்த சீசனில் சென்னையில் நடைபெற்ற ஒரே போட்டி சென்னை-கொல்கத்தா போட்டியாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- வெரட்டி வெரட்டி ரன் அடிச்ச 'கொல்கத்தாவை'... வெளுத்து எடுத்த சென்னை 'சிங்கங்கள்'
- IPL 2018, CSK vs KKR: CSK edges out KKR in a thriller!
- எதிரணியா இருந்தாலும்.. 'கேப்டன் மகளை' தூக்கிக் கொஞ்ச மறக்கவில்லை நம்ம ஷாரூக்!
- போட்டியை நேரில் காண 'சேப்பாக்கம்' வந்த ஷாரூக்.. என்ன 'பாட்டு' போட்டாங்க தெரியுமா?
- IPL 2018, CSK vs KKR: How many times CSK has chased a 200+ target