‘யூதர்களை கொல்ல வேண்டும்’: துப்பாக்கிச் சூடு நடத்தி 11 பேரைக் கொன்ற நபர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 28, 2018 01:54 PM
gunman expresses hatred of Jews by killing 11 people in pittsburgh

யூதர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த ஒருவர் நிகழ்த்தியுள்ள துப்பாக்கிச் சூடு பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சனிக்கிழமை காலை 9:45 மணி அளவில்,  யூதர்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ள இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் கவன ஈர்ப்பையும் பெற்றுள்ளது. 


அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் மாகாணத்தில் மக்கள் வழிபடும் இடத்துக்கு 3 துப்பாக்கிகளுடன் வந்த ராபர்ட் போவர்ஸ் உடனடியாக அங்கிருந்தவர்களை சுடத் தொடங்கியுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ராபர்ட்டினை சுட்டுப்பிடித்து கைது செய்துள்ளனர்.  விசாரித்ததில் தன் மக்கள் யூதர்களால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதை தன்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என இதனை செய்ததாக ராபர்ட் கூறியிருக்கிறார்.


அஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இதுகுறித்து கூறும்போது, ‘சம்பவ இடத்தில், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருந்திருந்தால் தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று கூறியவர், யூதர்களின் மீதான வெறுப்பினால் அமெரிக்காவில் நிகழும் குற்றங்கள் தனக்கு கவலை அளிப்பதாகவும்,  இது மனிதநேயத்தின் மீதான தம்  மக்கள்  மீதான தாக்குதல், இதனை சந்திக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : #PITTSBURGH #GUNMAN #HATRED OF JEWS #GUNSHOT