"சிறுவனை பார்த்து கண்கலங்கிய இளவரசர் ஹாரி"...நெகிழ்ச்சியான வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 24, 2018 03:03 PM
Down Syndrome affected boy strokes Prince Harry\'s beard and gives hugs

இளவரசர் ஹாரி தன்னுடைய குறும்புத்தனமான செயல்களால் இணையத்தை எப்போதுமே ஆக்ரமித்திருப்பார்.ஆனால் இம்முறை ஒரு சிறுவனுக்காக கண்கலங்கி,அதை கண்ட அனைவரையும் கண் கலங்க வைத்து விட்டார்.

 

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார்கள்.நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு குழந்தைகளின் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.வரிசையாக நின்ற குழந்தைகள் இளவரசர் ஹாரி மற்றும் மேகனிற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.

 

அப்போது டவுன் சிண்ட்ரோம் குறைபாடுடைய சிறுவன ஹாரியின் முகத்தை உற்று பார்த்தபடி இருந்தான்.உடனே ஹாரி அந்த சிறுவனை ஆர தழுவிக்  கொண்டார்.அந்த சிறுவன் ஹாரியின் தாடியை வருடி கொடுத்தான்.உடனே ஹாரி நகைச்சுவையாக சில முகபாவனைகளை அவனிடம் காட்டினார்.

 

இந்நிலையில் இளவரசர் ஹாரியுடன் இருந்த அவரின் மனைவி மேகன் மார்கிலை கண்ட அந்த சிறுவன், அவனிடம் இருந்த பூங்கொத்தை மேகனிடம் கொடுத்தார்.உடனே அதை வாங்கி கொண்ட அவர் அந்த சிறுவனை வாஞ்சையோடு கட்டியணைத்து கொண்டார்.பின்பு மேகனின் தலையில் கைவைத்து அவரது முடியை கோய்து விட்டான். இதனால் நெகிழ்ச்சி அடைந்த இருவரும் சந்தோஷத்தில் கண்கலங்கினர்.

 

இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் தற்போது அனைவரின் கண்களையும் குளமாக்கி வருகிறது.

Tags : #DOWN SYNDROME #PRINCE HARRY #MEGHAN MARKLE