சமோசாவை 'ஒளித்து' எடுத்துச்செல்லும் இளவரசர்.. வைரல் வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 26, 2018 02:37 PM
Price Harry becomes viral Samosa Out Of Meghan Markle\'s Charity Event

இளவரசர் ஹாரியின்  சுட்டித்தனமான செயல்கள்  சமூகவலைதளங்களில் அவ்வப்போது ட்ரெண்டாகி வருவதோடு மட்டுமல்லாமல், அது அனைவராலும் ரசிக்கவும் படுகிறது.இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் சமோசாவை மறைத்து எடுத்துச் சென்ற காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

 

இங்கிலாந்தின் லண்டன் நகரில் கென்சிங்டன் அரண்மனை உள்ளது. இங்கு ஒரு அறக்கட்டளைக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியை இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மார்க்கெல் நடத்தினார். அப்போது ஏராளமான விருந்தினர்கள் மற்றும் விஐபிக்கள்  நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.அவர்களுக்கு அறுசுவையான உணவுகள் பரிமாறப்பட்டன.அதில் இந்திய உணவான சமோசாவும் இடம்பெற்றிருந்தது.

 

அப்போது இளவரசர் ஹாரி சமோசா அடங்கிய தட்டு ஒன்றை, அசட்டுச் சிரிப்புடன்  பின்னால் மறைத்தபடி எடுத்து கொண்டு சென்றார்.இதை அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.அது தற்போது பல லட்சம் பேரால் பார்க்கபட்டதோடு மட்டுமல்லாமல் பலரும் அதை ஷேர் செய்து வருகிறார்கள்.

Tags : #PRICE HARRY #SAMOSA #MEGHAN MARKLE