எக்ஸ்மேன், அயர்ன்மேன் புகழ் 'ஹாலிவுட்' நடிகை கடத்தப்பட்டாரா?.. நீடிக்கும் தொடர் மர்மம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 20, 2018 05:58 PM
China\'s Leading Actress Fan Bingbing Has missing

சீனாவின் பிரபல நடிகையும், அதிக வருமானம் ஈட்டக்கூடியவருமான ஃபேன் பிங்பிங் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக மாயமாகி இருப்பது அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.

 

எக்ஸ் மேன், அயர்ன் மேன் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் படங்களிலும்  நடித்திருக்கும் ஃபேன் பிங்பிங்,கடந்த ஜூலை மாதம் காணாமல் போனார். அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது கடும் மர்மமாக இருக்கிறது.இதுகுறித்து  சீன ஊடகங்களில் தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

 

கடந்த ஜூன் மாதம்  ஹாங்காங்கில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் குறித்து எந்த தகவலும் இல்லை.அவர் மீது வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் அவர் ரகசியமாக கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அல்லது ஃபேன் சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படிருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.ஆனால் இவை அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஆகும்.

 

இந்த நிலையில், பிங்பிங்கின் காதலர் அவருடன் எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களையும், தனது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து நீக்கியது பிங்பிங் ரசிகர்களை மேலும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.ஃபேன் பிங்பிங்கின் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் நீ எங்கு இருக்கிறாய்? உனக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என பதிவிட்டு வருகின்றனர்.

 

பிங்பிங் காணாமல் போனது தொடர்பாக சீன அரசிடமிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான பதிலும் இதுவரை வராததால், இந்த விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.

Tags : #FAN BINGBING