106 வயதில் குடியுரிமை; இன்னும் ஓட்டு போடாத மூதாட்டி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 07, 2018 12:22 PM
106-Year-Old Woman Becomes US Citizen On Election Day. She\'s Never Vot

அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் தனது 106 வயதில் அமெரிக்காவின் குடிமகள் உரிமையை பெற்றுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

 

வேளாண் அலுவலராக பல்வேறு நாடுகள் சுற்றிய பெனிலாவின் 27 வயதில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. எனினும் அவர் இருந்த இடத்துக்கும் ஓட்டுப் போடும் சாவடிக்குமான அதிக தூரத்தை கடந்து சென்று ஓட்டுப்போட சிரமப்பட்டுள்ளார். 

 

அதன் பின்னர் 18 பிள்ளைகளை பெற்ற பெனிலாவின் வாழ்க்கை அவர்களுடனே இருந்துள்ளது. அவர் பெற்ற  மக்களுள் தற்போது 8 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள். கணவரை இழந்த பெனிலாவின் மிகக் குறைந்த வயதுடைய மகளுக்கு 55 வயதும், அதிக வயதுடைவருக்கு 75 வயதாகவும் இருக்கும் சூழலில் அமெரிக்க குடியுரிமையை தனது 90வது வயதில் பெற்றுள்ளார்.

 

கடந்த 2002-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த போது பெனிலாவுக்கு 90 வயது ஆன நிலையில், அவருக்கு இந்த நாட்டின் குடிமகளாக வேண்டும் என்கிற ஆசை துளிர்விட்டது. ஆனால் தேர்தல் நாளன்றுதான் அவர் நினைத்ததுபோல் குடியுரிமையே பெற்றுள்ளார். அடுத்து வரும் நாட்களுள் ஒட்டு போடவும் விருப்பம் தெரிவிக்கிறார். 

 

Tags : #MARIA VALLES VDA DE BONILLA #USCITIZEN #106YEAROLDWOMEN #VOTE