2 விக்கெட்.. 11 ரன்கள்.. கடைசி நேரத்தில் இவர் கொடுத்த அட்வைஸ்.. மனம் திறந்த விஜய் சங்கர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 06, 2019 02:50 PM

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 2 -வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரை வீசியது பற்றி தமிழக வீரரான விஜய் சங்கர் மனம் திறந்துள்ளார்.

IND v AUS 2nd ODI: Bumrah advice to Vijay Shankar in last over

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதற்கடுத்து நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து நேற்று மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூர் மைதானத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான 2 -வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பெளலிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதற்கடுத்து வந்த கோலி, விஜய் சங்கர் கூட்டணி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். 50 ஓவர்களின் முடிவில்  இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை எடுத்தது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. அதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் ஃபின்ஞ்ச் 37 ரன்களும், உஸ்மான் கவாஜா 38 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த ஆஸ்திரெலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது கடைசி ஓவரில் 11 ரன்கள் அடித்தால் வெற்றி பெரும் நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் கனவை விஜய் சங்கர் தனது பந்து வீச்சால் தகர்த்தெரிந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 -வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரை வீசியது பற்றி கூறிய விஜய் சங்கர்,‘43-44 -வது ஓவருக்குப் பிறகு எந்த நேரமும் நான் பந்து வீச அழைக்கப்படுவேன் என மனதளவில் என்னை தயார்படுத்துக் கொண்டேன். 48 -வது ஓவருக்குப் பிறகு பும்ரா என்னிடம் வந்து பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என கூறினார். அதனால் சரியான லெந்த்தில் ஸ்டம்புகளை நோக்கி பந்தை வீச வேண்டும் என பும்ரா ஆலோசனை கூறினார். அவர் கூறியதும் மனதளவில் ஒரு தெளிவு கிடைத்தது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது’ என விஜய் சங்கர் கூறியுள்ளார்.

Tags : #TEAMINDIA #INDVAUS #VIJAYSHANKAR #BUMRAH #ODI