' இந்திய விமானியை கைது பண்ணிட்டோம்'...கைகள் கட்டப்பட்ட நிலையில்...வெளியாகியிருக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Feb 27, 2019 02:54 PM

புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில்,அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்ததாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து இதனை மறுத்து வருகிறது.

VIDEO of captured and injured Indian pilot released by Radio Pakistan

இதனிடையே இன்று காலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.ஆனால் இதனை மறுத்த இந்திய விமானப்படை,பாகிஸ்தான் பழைய புகைப்படங்களை வெளியிட்டிருப்பதாகவும் அவர்கள் பொய்யான தகவலை வெளியிட்டிருப்பதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய விமானி கைது செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதுதொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.ஏற்கனவே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் வேளையில் பாகிஸ்தான் வெளியிட்டிருக்கும் புதிய வீடியோவால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tags : #PAKISTAN #INDIANMILITARY #INDIANAIRFORCE #PULWAMAATTACK #INDIAN PILOT #RADIO PAKISTAN