'உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா'?...தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் ஒரு தமிழர்...பரவும் புரளி!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Feb 27, 2019 11:07 AM

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய,எந்தவொரு வீரர்கள் விவரமும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில்,தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் முதுகுளத்தூரை சேர்ந்த தமிழன் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Fake news goes viral about Pakistan Attack

புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில்,அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக,பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது.இந்த தாக்குதலை நாட்டு மக்கள் உட்பட பல்வேறு தலைவர்களுக்கும் வரவேற்றுள்ளார்கள்.இந்திய விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஒரு தமிழர் என்றும்,அவர் முதுகுளத்தூரை சேர்ந்தவர் என்றும் புகைப்படத்துடன் ஒரு செய்தி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட வீரர்களின் விவரங்கள் இந்திய விமானப்படை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.அது வீரர்களின்பாதுகாப்பு தொடர்பானது என்பதால் அந்த விவரங்கள் அறிவிக்கப்படுமா என்பது கேள்விக்குறியே.

இதனிடையே மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்துடன் 'தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்'என்ற வாக்கியத்துடன் பரவும் அந்த செய்தியில் உண்மை இல்லை என்பதே நிதர்சனம்.எனவே ஒரு செய்தியை ஷேர் செய்வதற்கு முன்பு அதன் உண்மை தன்மையினை அறிந்த பின்பு ஷேர் செய்தால் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கலாம்.