புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி..! 1000 கிலோ குண்டுகளை வீசியது இந்தியா..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Feb 26, 2019 10:15 AM

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஷ்மீரில் பால்கோட் என்கிற பகுதியில் இந்திய போர் விமானங்கள் பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Indian Air Force dropped 1000 kg bombs on terror camps

காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்கிற பகுதியில் கடந்த 14 -ம் தேதி துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 -க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கொடூரத் தாக்குதலை பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்கிற அமைப்பு நடத்தியதாக பொருப்பேற்றது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் பதட்டம் நீடித்து வந்தது.

இந்நிலையில் காஷ்மீரின் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பால்கோட் என்கிற இடத்தில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படைத் தாக்குதல் நடத்தி உள்ளது.

இன்று அதிகாலை 3:30 மணிக்கு 12 மிராஜ் 2000 ரக போர்விமானங்கள் சுமார் 1000 கிலோ வெடிகுண்டை எல்லை தாண்டி பயங்கரவாதிகளின் முகாம் மீது வீசி முற்றிலும் அளிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் எல்லை தாண்டி வந்த இந்திய போர்விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை விரட்டியாதாக பாகிஸ்தான் நாட்டு செய்தித் தொடர்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags : #PULWAMAATTACK #INDIASTRIKESBACK #INDIANAIRFORCE #MIRAGE2000 #BALAKOT