மூன்று கார்களின் மீது மோதி பின் சாலை நடுச்சுவரில் பிஎம்டபுள்யூ காரை இடித்து நின்ற நடிகர்

Home > News Shots > India

By |
TV actor Siddharth Shukla booked after his BMW crashes into three cars

மும்பை ஓஷிவாரா பகுதியில் மூன்று கார்களின் மீது மோதி பின்பு சாலையின் நடுவில் இருந்த நடுச்சுவரின் மீது ஏறி மின்கம்பத்தில் மோதி நின்ற பிரபல தொலைக்காட்சி நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நடிகர் சித்தார்த் சுக்லா தான் ஓட்டி வந்த பிஎம்டபுள்யூ காரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.


சித்தார்த் மோதிய ஒரு காரில் இருந்த ராஜ்குமார் தூபே என்பவர் லேசான காயமடைந்ததாக கூறப்படுகிறது. போலிசார் கூறுகையில், நடிகரின் ரத்த மாதிரியை சோதனைக்கு அனுப்பியிருப்பதாகவும் சோதனையின் முடிவில் அவர் மது அருந்தியிருந்தாரா என்பது தெரியவரும் எனவும் கூறினர்.


மேலும் சித்தார்த் ஓட்டிய காரில் காற்றுப்பை திறக்காத போதிலும் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. சித்தார்த் 'ஹம்ப்டி ஷர்மா கி துல்ஹனியா' மற்றும் 'சூர்மா' ஆகிய பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

Tags : #SIDDHARTHSHUKLA #ROADACCIDENT