‘துப்பாக்கி, கோடாரி மாதிரி..’-சிம்பு படம் குறித்து சீமான்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

அரசியல் கட்சி தலைவரும், இயக்குநருமான சீமான் திரைக்கதையில் சுப்ரமணியன் இயக்கத்தில் உருவாகும் ‘அமீரா’ திரைப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.

Seeman opens up about Simbu's Film

ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை விழாவில் பேசிய இயக்குநர் சீமான், சிம்புவுடன் இணையவிருக்கும் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், தரையில் சொல்வதை திரையில் சொல்ல இந்த தளத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். மேடையில் ஆங்காங்கு பேசிய ஒரு சில காட்சிகள் மற்ற திரைப்படங்களில் வரும்போது எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதேபோல் சிம்புவை வைத்து நான் இயக்கவிருக்கும் திரைப்படமும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு துப்பாக்கி, கோடாரி, அறுவாள் போன்று ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும். அமீரா திரைப்படமும் சமூக அக்கறை கொண்ட திரைப்படம் தான். மொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு என்னை அழைக்கவும் மாட்டார்கள். நான் தேவைப்படவும் மாட்டேன் என்றார். 

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்க்வுள்ள நிலையில், அதை முடித்த பின்னர் சீமான் இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.