Petta USA All Banner

வெளிநாடுகளில் பேட்ட படத்தின் வசூல் இவ்வளவா ?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியாகியிருக்கும் கடந்த 10 ஆம் தேதி வெளியான படம் பேட்ட. இந்த  படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிக்குமார்,பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, மகேந்திரன், மேகா ஆகாஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

Rajinikanths Petta Collects 65 crore overseas

இதனால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் படம் பார்த்த ரசிகர்கள் படத்தில் 90 களின் ரஜினியை பார்க்கமுடிந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தியா தவிர பிற நாடுகளில் பேட்ட திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் மாலிக் என்ற வெளிநாட்டு விநியோகிஸ்தர் பேசுகிறார். அவர் தெரிவித்ததாவது, பேட்ட திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதனால் விநியோகிஸ்தர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பேட்ட படத்தின் வசூல் 17 ஆம் தேதி வரை வெளிநாடுகளில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ.65 கோடியை வசூல் செய்துள்ளது.

இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கக் கூடும். விரைவில் இது பற்றி அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.