VISITOR COLUMN

Kochadaiiyaan-Review

Kochadaiiyaan-Review

By Ranjith Kumar

Behindwoods.com isn't responsible for the views expressed by the visitor in this column. The visitor claims that this column is his/her own. If the column infringes any copyrights that you hold, please email us at columns@behindwoods.com.

சவுந்திரியா இயக்கத்தில் கே.எஸ்.ரவிகுமார் திரைக்கதையில் வெளிவந்திருக்கும் படம் தான் கோச்சடையான்.கிட்டத்தட்ட 6முறை படம் வெளியீடும் தேதியை மாற்றி இன்று வெற்றிகரமாக திரைக்கு வந்திருக்கும் கோச்சடையான்,ரசிகர்கள் மனதில் எந்தளவிற்கு இடம் பிடித்து இருக்கிறது என்பதே பார்க்கும் முன்பு கோச்சடையான் எப்படி உருவாக்கப்பட்டது, என்ன டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதே சுருக்கமாக பார்த்துவிட்டு விமர்சனத்திற்கு போகலாம் ...

அது என்ன  3டி மோஷன் கேப்சர்?

கோச்சடையான் படம் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜி தான் "மோஷன் கேப்சர்".அதாவது ஒரு பொருளின் அசைவை பதிவு செய்து அதை கணினியில் உள்ள மாதிரி உருவத்திற்கு மாற்றும் முறை தான் மோஷன் கேப்சர் .

ஒருவரது உடலில் உள்ள எலும்பு மூட்டுகளை கம்ப்யூட்டரில்  உள்ள உருவத்துடன் இணைப்பார்கள் இணைக்கப்பட்ட உருவம் செய்யும் அனைத்து அசைவுகளும்  கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் இந்த டெக்னாலஜி மூலமாக  அசைவுகள் மட்டுமின்றி முகபாவனையும் பதிவு செய்யப்படும். இந்த முறையில் தான் முழு படமும் எடுக்கப்பட்டுள்ளது .

கதை

கோட்டைப்பட்டினம் போர் படை தளபதியாக கோச்சடையான் . நாட்டு மக்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்கிறார் இதனால் நாட்டு மக்களும் கோச்சடையான் மீது தீராத அன்பு வைத்துள்ளனர். வரி செலுத்த வரும் அனைவரும் மன்னரிடம் கோச்சடையான் பெருமையை எடுத்து சொல்கின்றனர் இதனால் கோச்சடையானை பழிவாங்க சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார் மன்னர் இந்த நேரத்தில் கோச்சடையான் தனது படை வீரர்களுடன் ஆயுதங்களை எடுத்து கொண்டு கடல் வழியாக பயணிக்கிறார், ஆனால் எதிர்பாரத விதமாக கலிங்கபுரி(எதிரி நாடு) படைவீரர்கள் கப்பலை தாக்குகிறார்கள் இந்த யுத்தத்தில் கோச்சடையான் ஜெயிக்கிறார், இருந்தும் தனது படை வீரர்கள் உண்ணும் உணவில் எதிரி நாடு விஷயத்தை கலந்துவிட கோச்சடையான் தலைமையில் வந்த படை வீரர்கள் உயிருக்கு போராடுகிறார்கள். கப்பலில் போதிய விஷ முறிவு மருந்து இல்லாததால் தனது எதிரி நாடு(கலிங்கபுரி)அருகில் இருப்பதால் அவர்களிடம் உதவி கேட்டு எதிரி நாட்டு எல்லைக்குள் நுழைகிறார் கோச்சடையான் ஆனால் கலிங்கபுரி மன்னர் நிபந்தனை ஒன்று விதிக்கிறார் அதாவது "உன்னுடைய படை வீரர்களை நான் காப்பாற்றுகிறேன் அதற்கு நீ செய்ய வேண்டியது உன்னுடைய படை வீரர்களையும்,ஆயுதங்களையும் இங்கேயே விட்டுவிட்டு செல்ல வேண்டும் என்று கூறுகிறார்"கோச்சடையான் இதற்கு அடி பணிந்து தனது நாட்டிற்கு திரும்புகிறார். அங்கு அவரே போர் குற்றவாளியாக அறிவித்து மரண தண்டனை விதிக்கப்படுகிறது இதை ஏற்றுக்கொண்ட கோச்சடையான் ,தனது மகன்கள் ராணா-சேனா இருவரிடமும்  சில பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு மரணத்தை ஏற்கிறார் கோச்சடையான். இதன்பிறகு ராணா எதிரி நாட்டை வீழ்த்தினாரா?அல்லது தனது சொந்த நாட்டு மன்னரை பழிவாங்கினாரா?சேனா என்ன ஆனார் ? என்பதுதான் மீதி கதை ....




நடிகர்களின் பங்களிப்பு

படத்தில் டெக்னாலஜி தான் ஹீரோ அந்த வகையில் டெக்னாலஜிக்கு ஏற்றவாறு அனைத்து நடிகர்களும் தங்களின் பங்களிப்பை தந்து உள்ளனர்.


டெக்னிக்கல்

படத்தின் மிகப்பெரிய விஷயம் டெக்னாலஜி தான் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய பரிணாமம் .
காட்சிகள்  அமைக்கப்பட்ட விதம் பிரமிக்க வைக்கிறது அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசையில் பின்னி எடுத்து இருக்கிறார்,படத்தில் வைக்கப்பட்டு இருக்கும் கேமரா அந்த கேமரா செல்லும் திசை இவை  எல்லாமே அடுத்த கட்ட முயற்ச்சி (குறிப்பாக கோச்சடையான் அறிமுக காட்சி,கடைசிகட்ட போர் காட்சி,தீபிகா சண்டை காட்சி).இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க கிராபிக்ஸ்,அனிமேஷன் போன்ற விஷயங்கள் தரமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.எடிட்டர் 2மணி நேரத்தில் தனது வேலையை சரியாக செய்து இருக்கிறார் இருந்தாலும் பாடல் காட்சிகளை குறைத்து இருக்கலாம்.தலைவருக்கு ஏற்றவாறு வசனங்கள் எழுதி நம்மை ரசிக்க வைக்கிறார் கே.எஸ்.

சவுண்டு

படத்தில் பல இடங்களில் வசனங்கள் இசையின் சத்தத்தில் மறைந்து விடுகிறது காரணம் என்னவென்று தெரியவில்லை.

இயக்குனர்

ஒரு இயக்குனராக தனது பணியை சரியாக செய்து இருக்கிறார் சவுந்திரியா, காட்சிக்கு காட்சி அவரின் உழைப்பு  பிரமிக்க வைக்கிறது அதிலும் கோச்சடையான் வரும் பகுதிகள் பிரமாண்டத்தின் உச்ச கட்டம், இருந்தாலும் சில இடங்களில் ராணாவாக வரும் ரஜினியின் அசைவுகள் இயற்கைக்கு மாறாக இருக்கிறது அதே போல  போர் நடக்கும்  இடத்தில் இரத்தம் தான் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் ஆனால் இரத்தம் தெறிக்கும் காட்சிகள் குறைவு,இது போன்ற சில விஷயங்களை இயக்குனர் கவனித்து இருக்கலாம் எது எப்படியோ பிரமாண்ட இயக்குனர் வரிசையில் சவுந்திரியா இடம் பிடிப்பது உறுதி.

படம் பற்றிய அலசல்

படம் ஆரம்பித்த அடுத்த நொடியில் படத்துடன் ஒன்ற வைக்கிறார் தலைவர், ஆனால் முதல்பாதி முழுவதும் இயல்பான திரைக்கதை என்பதால் சில இடங்களில் சலிப்பு தட்டுகிறது அதிலும் அடிக்கடி வரும் பாடல் காட்சிகள் பார்க்க,கேட்க நன்றாக இருந்தாலும் அட என்னப்பா இது என்று மனதில் ஒரு வித கேள்வி தோன்றினாலும் இடைவேளை வரை படத்தின் காட்சி அமைப்பை ரசிக்க முடிகிறது இரண்டாவது பாதி தான் படத்தின் ஹைலைட் அதிலும் கோச்சடையான் வரும் காட்சிகள்,ராணாவின் கடைசிகட்ட வசனங்கள் ரசிக்க வைக்கிறது.திரையுலக நாயகன் நாகேஷ் அவர்களை திரும்பவும் திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பலம்

ஏ.ஆர்.ரஹ்மான்,சூப்பர் ஸ்டார்,பிரமாண்ட காட்சி அமைப்பு,வசனங்கள்,இரண்டாவது பாதி

பலவீனம்

அடிக்கடி வரும் பாடல் காட்சிகள்,முதல் பாதியில் சலிப்பூட்டும்  சில இடங்கள்

இயக்குனர் பாராட்டு பெறும் இடங்கள்

கோச்சடையான் மரண மேடை ஏறும் முன்பு மகன் ராணா அப்பாவை நோக்கி கேட்கும் கேள்விகள் இயக்குனர் டச்.

இன்னொரு மகன் சேனா எங்கு இருக்கிறார்  என்ற கேள்விக்கு இறுதியில்  இயக்குனர் சொல்லிருக்கும்  பதில் இயக்குனரின் திறமை.

நண்பனை விட நாடு தான் முக்கியம் என்ற ஒரே வசனத்தை இருவேறு சூழ்நிலையில் பயன்படுத்தி இருப்பது இயக்குனரின் நையாண்டி.

டாடி எனக்கு ஒரு டவுட்டு?

ராணா-சேனா சந்திப்பு எதற்காக? தொடரும் என்ற வார்த்தை தான் அதற்கான பதிலா ? உண்மையை சொல்லுங்க மேடம்.....

ரசிகர்கள் கமெண்ட்ஸ்

வரவேற்க தக்க முயற்சி,குழந்தைகளுடன் சென்று முப்பரிமாணத்தில்(3D) பார்த்து மகிழலாம்.

மொத்தத்தில் கோச்சடையான் 100வருட இந்திய சினிமாவில் சாதனை படம்,தமிழ் சினிமாவின் இன்னொரு அடையாளம்,ரஜினியின் அவதார்.

 

 

 

 

Ranjith Kumar
ranjithvikram@yahoo.com

Want to publish your column too?
Please send your column to columns@behindwoods.com.

FACEBOOK COMMENTS

ABOUT THIS PAGE

This page has information about Kochadaiiyaan-Review, kochadaiiyaan.