மல்லிகை என் மன்னன் மயங்கும்
மல்லிகை என் மன்னன் மயங்கும்

வாணி ஜெயராம் என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது "மல்லிகை என் மன்னன் மயங்கும்" பாடல் தான். முத்துராமன், கே ஆர் விஜயா உள்ளிட்டோர் நடித்து AC திருலோக்சுந்தர் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் "தீர்க்க சுமங்கலி". இந்த படத்தில் தான் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. வாணி ஜெயராம் குரலில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், முத்துராமன் மற்றும் கே.ஆர். விஜயா ஆகியோர் பாடலின் காதல் காட்சிகளில் மெய்சிலிர்க்க வைத்திருப்பார்கள்.