எங்கிருந்தோ ஒரு குரல்..
எங்கிருந்தோ ஒரு குரல்..

திருலோக்சந்தர் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம், "அவன்தான் மனிதன்". இந்த படத்தில் சிவாஜிகணேசன், ஜெயலலிதா, முத்துராமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம். எஸ். விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ஜெயலலிதா வீட்டில் பாடும் பாடல் போல உருவாகி இருந்த "எங்கிருந்தோ ஒரு குரல்" பாடலை வாணி ஜெயராம் பாடி இருந்தார். பலமுறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் இந்த பாடல் அமைந்திருக்கும்.