சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில், தமது 78 ஆவது வயதில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமாகி உள்ளார். இசை  உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நடத்திய வாணி ஜெயராமின் மறைவு, அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரையும் கண்ணீரில் நனைய வைத்துள்ளது.

காற்றில் கரைந்தாலும் காலத்தால் அழியாத வாணி ஜெயராம் குரல்.. மறக்க முடியாத பாடல்கள் லிஸ்ட்..!!
காற்றில் கரைந்தாலும் காலத்தால் அழியாத வாணி ஜெயராம் குரல்.. மறக்க முடியாத பாடல்கள் லிஸ்ட்..!!

தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் குரலில் பாடல்களை கேட்பதற்கு என்று பிரத்யேக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு வாணி ஜெயராம் பாடிய பாடல்கள் கூட, இன்றளவிலும் காலம் கடந்து அழியாமல் நிற்கிறது. 19 மொழிகளில் சுமார் 10, 000 பாடல்கள் வரை பாடியுள்ள வாணி ஜெயராம், தனது 78 ஆவது வயதில் வீட்டில் வைத்து காலமாகி உள்ளார். அவரது மறைவு, பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. அவரது குரலில் பலரையும் சொக்க வைத்த பாடல்களை காணலாம்.