"ஏழு ஸ்வரங்களுக்குள்"..
"ஏழு ஸ்வரங்களுக்குள்"..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் "அபூர்வ ராகங்கள்". கே. பாலசந்தர் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் கமல்ஹாசன், ஸ்ரீவித்யா, சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் உருவாகி இருந்த பட பாடலில், "ஏழு ஸ்வரங்களுக்குள்" என தொடங்கும் பாடலை வாணி ஜெயராம் பாடி இருப்பார். இன்று வரை மனதை கவரும் வகையில் அமைந்திருக்கும் இந்த பாடலை பாடியதற்காக வாணி ஜெயராமுக்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது.