Buffoon D logo top
Trigger D Logo Top
Naane Varuven M Logo Top

தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள்
தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள்

வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.சசிகுமார் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ளப் படம் 'ஆதார்'. கட்டட தொழிலாளியாக வரும் பச்சைமுத்து (கருணாஸ்) காணாமல்போன தன் மனைவியை கண்டுபிடிப்பதில் எதிர்கொள்ளும் எதார்த்த சிக்கலும், அதை சுற்றிய அதிகார அரசியலுமே இப்படத்தின் கதைக்களம்.

வைபவ் மற்றும் அனகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் 'பபூன்'.  இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் உருவாகி செப் 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

அதர்வா, தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் ஆகியோர் நடிப்பில் இயக்குநர் சாம் அன்டன் இயக்கத்தில் உருவாகி செப் 23-ஆம் தேதி வெளியாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'ட்ரிக்கர்'. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் செரா. கலையரசன் இயக்கத்தில் 'காக்கா முட்டை' படத்தில் சிறுவனாக நடித்த விக்னேஷ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'குழலி' . சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை உள்ளிட்ட 16 விருதுகளை இப்படம் வென்றுள்ளது.

இயக்குநர் ஃபெலினி இயக்கத்தில் அரவிந்த் சாமி, குஞ்சக்கோ போகன், ஈஷா ரெப்பா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'ரெண்டகம்'. மலையாள வெர்ஷனான 'Ottu' படத்தின் தமிழ் வெர்ஷன் இப்படம்.

பாலிவுட் இயக்குநர் ஆர்.பால்கி எழுதி இயக்கியுள்ள ஹிந்தி திரைப்படம் 'Chup'. துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில், சன்னி தியோல் குருதத்தாகவும், அவருடன் ஸ்ரேயா தன்வந்தரி மற்றும் பூஜா பட் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர்.

ஆர். மாதவன், அபர்சக்தி குரானா, தர்ஷன் குமார், குஷாலி குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் Dhokha: Round D Corner. இந்தி படமான இப்படத்தை குக்கி குலாட்டி இயக்கியுள்ளார். T-Series இப்படத்தைத் தயாரித்துள்ளது. 

இயக்குநர் ஷின்ஜி ஹிகுச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Shin Ultraman'. ஹிடேக்கி அன்னோவால் எழுத்தில் உருவாகியுள்ள இந்த ஜப்பானிய சூப்பர் ஹீரோ திரைப்படத்துக்கும் வரவேற்பு உண்டாகியுள்ளது.