திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்
திரையரங்குகளுக்கு பிறகான ஓடிடி ரிலீஸ்

இயக்குநர் டீகே இயக்கத்தில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்த 'காட்டேரி' திரைப்படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் மீண்டும் ஓடிடி வெளியீடாக செப்டம்பர் 2-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

இதேபோல் கடந்த ஜூலை 15-ம் தேதி என்.ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மை டீயர் பூதம்'. இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி மீண்டும் வெளியாகிறது.

இந்த வரிசையில், நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் திரையரங்குகளில் ஏற்கனவே வெளியான 'விக்ராந்த் ரோணா' திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியாகிறது.