பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி காலமானார். 

நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..!
நடிகர் மயில்சாமி மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர்..!

57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். 

இந்நிலையில்தான் நடிகர் மயில்சாமி தான் வசித்துவந்த சென்னை சாலிகிராமத்தில் மாரடைப்பால் திடீரென உயிரிழந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. முன்னதாக அதிகாலையில் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் தன் குடும்பத்தினரால் சென்னை போரூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிகிறது. மருத்துவமனையில் மருத்துவர்கள் நடிகர் மயில்சாமியின் மரணத்தை உறுதி செய்தனர். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.