"சிரிக்க வைக்கும் சித்தனே. சிவனுடைய பக்தனே." - நடிகர் சாம்ஸ் தமது இரங்கல்
"சிரிக்க வைக்கும் சித்தனே. சிவனுடைய பக்தனே." - நடிகர் சாம்ஸ் தமது இரங்கல்

நடிகர் சாம்ஸ் தமது இரங்கல் பதிவில், “அருமை நண்பர் மயில்சாமி அவர்களின் மறைவு மனதை பிசைந்தது... அற்புதமான மிமிக்ரி திறமையால் அகில உலகமும் சுற்றி வந்தவர். அளவில்லாத நகைச்சுவையை சினிமாவில் அள்ளித் தந்தவர். அடுத்தவர்க்கு அன்னமிட்டு அழகு பார்ப்பவர். அல்லல்படுவோர்க்கு அள்ளி தந்து ஆனந்தம் அடைபவர் (எம்ஜிஆரின் தீவிர ரசிகராயிற்றே). நீங்கள் இருக்கும் இடத்தில் நகைச்சுவையும் இருக்கும் நாக்குக்கு சுவையாக நல்ல உணவும் இருக்கும். சிறப்பான தடத்தை இந்த பூமியில் பதித்து விட்டு தான் சென்றுள்ளீர்கள்

செய்த புண்ணியங்களால் உங்கள் குடும்பத்தை சிறப்பாக வாழ வைப்பீர்கள். சிரிக்க வைக்கும் சித்தனே. சிவனுடைய பக்தனே. சிவனே சிரித்து மகிழத்தான் சீக்கிரமே கொண்டு சென்று விட்டானோ ? பிரார்த்திக்கிறேன்!” என தெரிவித்துள்ளார்.