நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

 

அஜித் நடிக்கும்'துணிவு' படத்தை ரிலீஸ் செய்யும் வினியோகஸ்தர்கள் லிஸ்ட்!
அஜித் நடிக்கும்'துணிவு' படத்தை ரிலீஸ் செய்யும் வினியோகஸ்தர்கள் லிஸ்ட்!

துணிவு படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

துணிவு படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு திரைப்படம் 2023 ஜனவரி மாதம் 11 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உலகம் முழுவதும் துணிவு படத்தினை ரிலீஸ் செய்யும் வினியோகஸ்தர்கள் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.