யூனிபார்ம் போடலனாலும் நான் போலீஸ் தான் - மிரட்டலான லுக்கில் விஜய் ஆண்டனி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘திமிரு புடிச்சவன்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

Vijay Antony sporting Six pack look for the first time with Khakhee

ஓபன் தியேட்டர் தயாரிப்பில் இயக்குநர் செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ‘காக்கி’ என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனியுடன் நடிகர் சத்யராஜ், ஜெய் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்திற்காக முதன்முறையாக நடிகர் விஜய் ஆண்டனி 6 பேக் வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ‘யூனிபார்ம் போடலனாலும் நான் போலீஸ் தான்.. என் உடம்பே’ என்ற டேக்லைனுடன் ‘காக்கி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இன்று முதல் தொடங்குகிறது.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அவகத் இசையமைக்கிறார். இப்படத்தின் இதர கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.