மக்கள் செல்வன் தெரியும்: மக்கள் செல்வி யார் தெரியுமா ?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சிம்பு நடித்த 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் வரலக்ஷ்மி சரத்குமார். 'தாரைதப்பட்டை', 'சர்கார்' , 'சண்டக்கோழி 2' உள்ளிட்ட படங்களில் தன் போல்டான நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார்.

Varalaxmi Sarathkumar called as Makkal selvi in Deni

மேலும் தனக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களையே அவர் தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள டேனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை வ.சி. சந்தானமூர்த்தி எழுதி இயக்குகிறார். இந்த படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.  இந்த படத்தின் போஸ்டரில் மக்கள் செல்வி வரலக்ஷ்மி சரத்குமார் என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தன் யதார்த்தமான நடிப்பால் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் 'மக்கள் செல்வன்' என அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.