வைரலாகும் சூப்பர் சிங்கர் செந்தில்-ராஜலட்சுமியின் புது மேக்-ஓவர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான செந்தில்-ராஜலட்சுமி ஜோடியின் புதிய கெட்டப் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Super Singer Senthil and Rajalakshmi duo new look goes viral

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான செந்தில், தனது மனைவியுடன் இணைந்து திரைப்படங்களிலும் பின்னணி பாடல்கள் பாடி வருகிறார். இந்த ஜோடிக்கென்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கணவன் - மனைவிக்கான `மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாக உள்ளனர். இந்நிகழ்ச்சியில்  `மேக்ஓவர் ரவுண்ட்' என்ற சுற்றுக்காக செந்திலும், ராஜலட்சுமியும் இதுவரை யாரும் எதிர்பார்க்காத புதிய கெட்டப்பில் வந்து அசத்தியுள்ளனர்.

வழக்கமாக வேஷ்டி-சேலை காஸ்டியூமில் காட்சியளிக்கும் செந்தில்-ராஜலட்சுமி ஜோடி கோட் சூட், கவுனில் வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர். இது குறித்து பேசிய ராஜலட்சுமி, `மேக்ஓவர் ரவுண்ட்'-ல் கணவன் - மனைவி இருவரும் இதுவரைக்கும் போடாத காஸ்டியூம் பற்றி சொல்லணும், எந்த மாதிரி காஸ்டியூம் போட்டா நல்லா இருக்கும் அப்படின்னும் சொல்லணும், அதுக்காக பண்ணினது இந்த மேக்-ஓவர்.

அவர டி-ஷர்ட் , பேண்ட் போட்டு பார்த்ததில்ல, எங்க கல்யாண ரிசப்ஷன்ல கோட் சூட் போட்டிருந்தார், அது அவருக்கு நல்லா இருந்தது என நான் கூறினேன். அவரிடம் தனியாக கேட்டபோது, சேலை, சுடிதாரில் என் மனைவியை பார்த்திருக்கிறேன், கிறிஸ்டியன் கல்யாணத்துல போடுற கவுன் போட்டா நல்லா இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

அவர் சொன்ன காஸ்டியூம் எப்படி இருக்கும்னு எனக்கே தெரியாது. ஆனா, மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை டீம் மிகவும் மெனக்கெட்டு ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செஞ்சாங்க. மேடைல அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்குற மாதிரி நான் அவர் விருப்பப்பட்ட காஸ்டியூம்ல வந்தது பார்த்து அவரே அதிர்ச்சியாகிட்டாரு. ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தது.

இந்த மாதிரியான காஸ்டியூம்லா நாங்க போட்டது இல்ல, அது போடுறதுக்கான வாய்ப்பும் எங்களுக்கு இல்ல. இதெல்லாம் நாங்க போடுவோம்னு நினைச்சிக் கூட பார்க்கல. மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை இயக்குநருக்கு தான் நன்றி சொல்லணும். ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து ரசிச்சோம் என ராஜலட்சுமி கூறியுள்ளார்.