STM Banner USA
VRV Banner USA

இந்த 10 வருடங்களுக்காக ரசிகர்களுக்கு நன்றி - பிரபல காமெடி நடிகர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த சூரிக்கு 'வெண்ணிலா கபடிக் குழு' திரைப்படம் மிகப் பெரிய அடையாளத்தை தந்தது. அந்த படத்தில் இடம் பெற்ற பரோட்டா காமெடியை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது.

Soori thanks his mentor suseenthiran and fans for 10 years of Vennila kabadi kuzhu

பின்னர் பிரபல காமெடி நடிகராகி சிவகார்த்திகேயன் தொடங்கி அஜித், விஜய் என ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் வெண்ணிலாக் கபடிக் குழு திரைப்படம் வெளியாகி நேற்றோடு பத்தாண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இயக்குநர் சுசீந்திரன் கென்னடி கிளப் படப்பிடிப்பின் போது கேக் வெட்டி கொண்டாடினார்.

நடிகர் விஷ்ணுவும் பெருமையுடன் அதனை தனது மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.  அதனைத் தொடர்ந்து நடிகர் சூரியும் தனது ட்விட்டர் பக்கத்தில்,

வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. என்னுடைய குரு இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி. மற்றும் என்னுடைய எல்லா தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கும் நன்றி குறிப்பாக ரசிகர்களுக்கு நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார்.