இண்ட்ரோ பாடலுக்காக யூடியூப் பிரபலங்களை களமிறக்கிய சிவகார்த்திகேயன்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் சீரியல் நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.

Sivakarthikeyan gets all Youtubers together for Rio Raj's Intro song!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் வெளியான ‘கனா’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் வேனுகோபால் இயக்குகிறார்.

இதுவரை பெயரிடப்படாத இப்படத்தில் VJ மற்றும் தொலைக்காட்சி நடிகருமான ரியோ ராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக புதுமுக நாயகி ஷிரின் கான்சாவ்லா நடிக்கிறார். மேலும், ராதாரவி, ஆர்.ஜெ விக்னேஷ் மற்றும் ‘Black Sheep’ எனும் யூடியூப் சேனல் குழுவினரும் இணைந்து நடித்துள்ளனர். 

இந்நிலையில், இப்படத்தில் வரும் அறிமுக பாடலில் ரியோவுடன் பல்வேறு யூடியூப் பிரபலங்களும் இணைந்து நடிக்கின்றனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள நாயகன் ரியோ, விரைவில் வெயிட்டா ஒன்னு வருது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் இருக்கும் இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.