கால் டாக்சி டிரைவர்களின் துயரை சொல்லும் நயன்தாரா வில்லனின் 'இயக்கி'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நாம் வாழ்வில் செல்லும் பெரும்பாலான பயணங்களில் கால் டாக்சி டிரைவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஆனால் நாம் அவர்களை பற்றி சற்றும் யோசித்து பார்ப்பது இல்லை.

Nayanthara's Dora villain Shan's Iyakki short film will describe Call Taxi Driver's life

இந்நிலையில் கால் டாக்சி டிரைவர்களின் வாழ்வியலை, அவர்கள் படும் துயரத்தை அடிப்படையாகக் கொண்டு ஷான் இயக்கியிருக்கும் படம் இயக்கி. வெறும் 26 நிமிடங்களில் டாக்சி டிரைவர்கள் படும் துயரங்களை, வலிகளை நம் கண் முன்னால் நிறுத்தியிருக்கிறார் ஷான்.
                                         
இந்த படம் குறித்து ஷான் தெரிவித்த போது, இந்த கதையை படமாக்குவது என்று முடிவெடுத்தவுடன் கால் டாக்சி ஓட்டுநரானேன்.  500 க்கும் மேல் டிரிப் அடித்து அனுபவத்தை கற்றுக் கொண்டு அதற்கு மேல் படமாக்கினேன்.

பட்டதாரியான அவர்கள் உணவு, உறக்கம் எல்லாவற்றையும் இழந்து குடும்பத்திற்காக துயர வாழ்வை ஏற்றுக் கொண்டிருக்கும்  அவர்களது வலியை சொல்லி மாளாது. என்றார்.

நயன்தாரா நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படம் டோரா. இந்த படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷான் என்பது குறிப்பிடத்தக்கது.

கால் டாக்சி டிரைவர்களின் துயரை சொல்லும் நயன்தாரா வில்லனின் 'இயக்கி' VIDEO